December 15, 2018

My Header ADS Slide
My Header ADS Slide

கொடிவேரி அணை உருவான விதம்

kodivery

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தி, கோபி, நம்பியூர், அந்தியூர் உள்ளிட்ட பவானி ஆற்றுப் பகுதிகள் மைசூர் மன்னர்கள் மற்றும் விஜயநகர பேரர சின் ஆளுகையில் இருந்தன. மைசூர் மேல்நாடு என்றும் சத்தி உள்ளிட்டவை கீழ்நாடு என்றும் அழைக்கப்பட்டன. அன்றைய மக்கள் சத்தியமங்கலம் காசிபாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே ஏரா ளமான பாறைகளைக் கொட்டி சிறு நீர்த் தேக்கம்போல உருவாக்கி பாசனத் துக்குப் பயன்படுத்தினர். ஆனால், பவானியில் அடிக்கடி பெருக்கெடுத்த வெள்ளம் இதனை அடித்துச் சென்றது.
இதனால், 1490-ல் உம்மத்தூரை ஆட்சி புரிந்த மன்னர் நஞ்சராய உடை யாரிடம் சென்ற கீழ்நாட்டு மக்கள் ஆற்றில் தடுப்பணை கட்டித் தரும்படி கேட்டனர். அதன்படி கொடிவேலி செடிகள் சூழ்ந்த ஓர் இடத்தில் தடுப் பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அங்கே பாறைகள் இல்லாததால் சத்திய மங்கலத்தில் இருந்து 10 கி.மீ தொலை வில் உள்ள கம்பத்ராயன் மலையில் இருந்து பாறைகள் வெட்டிக் கொண்டு வரப்பட்டன. கட்டுமானப் பணிகளுக்காக ஒடிஷா, கர்நாடகம், ஆந்திர மாநிலங் களில் இருந்து கல்வேலைகளில் தேர்ச்சிபெற்ற கல் ஒட்டர் சமூகத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
சுமார் 3 ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டது. அதுதான் இன்றைக்கும் நிலைத்து நிற்கும் கொடி வேரி அணைக்கட்டு. அதன்படி 151 மீட்டர் நீளம், 30 அடி அகலத்தில் அணை கட்டப்பட்டது. அணையின் வலதுப் பக்கத்தில் தடப்பள்ளி வாய்க்காலும், இடதுப் பக்கத்தில் அரசன்கோட்டை வாய்க்காலும் சுமார் 5 கி.மீ நீளத்துக்கு ஆற்றை ஒட்டியே வெட்டப்பட்டன. பிற்காலங்களில் பாசனம் பெருகப் பெருக தடப்பள்ளி வாய்க்கால் 26 கி.மீ வரையும் அரசன்கோட்டை வாய்க்கால் 42 கி.மீ வரையும் வெட்டப்பட்டன. கொடிவேரி அணையின் சிறப்பே அதன் கால்வாய்கள் மற்றும் மணல் வாரிகள்தான். நுட்பமான நீரியல் தொழில்நுட்பம் கொண்டவை அவை.
ஓர் ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்கக் கூடாது. குறிப் பிட்ட அளவு ஆற்றின் நீர் கடலில் கலக்க வேண்டும். ஆற்றின் நீரியல்போக்கு திசையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேலாக எந்தக் காரணம் கொண்டும் திருப்பக்கூடாது என்கிறது உலக ஆறுகள் பாதுகாப்பு விதிமுறைகள் (Helsinki Rules). ஆனால், அன்றைக்கே நம் முன்னோர்கள் இதனை கொடிவேரி அணைக்கட்டுப் பாசனத்தில் நடை முறைப்படுத்தியிருக்கிறார்கள்.
தடப்பள்ளி கால்வாயும் அரசன் கோட்டை கால்வாயும் ஆற்றை ஒட்டியே இருபுறமும் செல்கிறது. இதனால் ஆற்றின் நீரோட்டம் திசை திருப் பப்படுவதில்லை. மேலும், ஆற்றில் இருந்து கால்வாய்களுக்குச் செல்லும் தண்ணீர் வயல்களுக்குச் சென்று அதன் கசிவு நீர் மீண்டும் வாய்க்கால் வழியாக ஆற்றுக்கு வந்துவிடும். அதாவது ஒரு பாசன நிலம் தனக்குத் தேவை யானதுபோக மீதமிருக்கும் தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கு அனுப்பிவிடுகிறது. இதற்காகப் பாசன நிலங்களின் மட்டத்துக்கு ஏற்ப கால்வாய்கள் அமைக் கப்பட்டன.
மிகச் சிறந்த சிக்கன நீர் மேலாண்மை இது. இங்கிருந்து ஆற்றுக்கு கீழே 60 கி.மீ தொலைவில் இருக்கிறது காலிங் கராயன் அணைக்கட்டு. தடப்பள்ளி – அரசன்கோட்டை கால்வாய்களின் மிகச் சிறந்த நீர் மேலாண்மை காரணமாக இன்றைக்கும் கொடிவேரி அணையில் பாசனத்துக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்தால், அந்தத் தண்ணீர் இடைப்பட்ட பகுதிகளின் பாசனத்துக்கு போக மீதம் சுமார் 400 கனஅடி தண்ணீர் காலிங்கராயன் அணைக்குச் சென்றுசேர்கிறது. அதேசமயம் நவீன காலத்தில் வெட்டப்பட்ட கிருஷ்ணா நதி கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரில் பாதியளவுகூட சென்னைக்கு வருவ தில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்தது மணல்போக்கி தொழில் நுட்பம். அணைக்கட்டின் மையப் பகுதி யில் தண்ணீரின் குவி மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக
்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் 20 அடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கத் துக்குள் கல்லால் ஆன நுட்பமான சல் லடை அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்பு கள் செய்யப்பட்டிருக்கின்றன. மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டன. இந்த மணல்போக்கிகள் மணலையும் சேற் றையும் உள்ளே இழுத்து மறுபக்க சுரங்கத்தின் துவாரம் அணைக்கு வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனி சிறப்பு. இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்தது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பம் இது…/

தல_வரலாறு
கொடிவேரி அணை. சோழ கொங்காள்வான் ஆள் (கி.பி 1125) ஆம் ஆண்டு கட்டப்பட்டது…/ கொடிவேரியின் பழைய பெயர் குழவாற்றூர்.
முதல் குலோத்துங்கனின் 55-வது ஆட்சி ஆண்டில் (கி.பி 1125) சோழ கொங்காள்வான் கொடிவேரியில் பவானி ஆற்றுநீர் பாயும் இடத்தை அகலப்படுத்தி நீரை பெரும் கற்களை கொண்டு தேக்கி கால்வாய் வெட்டினான்..இன்று இது கொடிவேரி அணை என்று அழைக்கப்படுகிறது..இந்த செய்தி கொடிவேரி,பவானி ஆற்றங்கரையில் உள்ள கல்வெட்டு கூறுகிறது…/
கொடிவேரி அணை சத்தியமங்கலத்திலிருந்து 15,கி.மீ தொலைவில் உள்ளது.கொடிவேரி அணையின் வடக்குப் பக்கம் ஒரு கால்வாயும்,தெற்கு பக்கம் ஒரு கால்வாயும் ஊராளி செம்ப வேட்டுவர் வெட்டினார்.கொடிவேரி அணையின் வடக்குப் பகுதில் உள்ள கால்வாய் அத்தாணி வரை செல்கிறது.ஏறக்குறைய 10 கி.மீ வரை செல்கிறது.இந்தக் கால்வாய் அரக்கன்கோட்டை கால்வாய் என்று அழைக்கப்படுகிறது..கொடிவேரிஅணையின் தெற்கு பக்கத்தில் உள்ள மற்றொரு கால்வாய் கவுந்தப்பாடி,மேட்டுப்பாளையம் வரை செல்கிறது.இது ஏறக்குறை 15 கி.மீ தொலைவு செல்கிறது.இந்தக் கால்வாய் தடப்பள்ளி கால்வாய் என்று அழைக்கப்படுகிறது,,இந்த இரண்டு கால்வாய்கள் மூலம் பல ஆயரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது..இதிலிருந்து கி.பி.11 ஆம் நூற்றண்டிலே கொங்குநாட்டில் நீர்பாசன வசதியை பெருக்கியவர்கள் வேட்டுவ ஆட்சியாளர்களே என உறுதியாக தெரிகிறது…

Related posts

Post Ad Cloud Pluz